அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 உலக வன நாள் 2012

2012ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி உலக வன நாளை காவியன் பள்ளி கொண்டாடியது. காடுகளின் முக்கியத்துவம், அவற்றிலிருந்து நாம் அடையும் பயன்களை குறிக்கும் வகையில் பள்ளியில் குறிப்பிட்ட நேரத்தில் மணி அடிக்கப்பட்டது. வாழும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு வன்ங்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது, மரங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைவரும் உணர வேண்டிய தருணம் பற்றியும் தேசிய பசுமைப் பயிர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு. கே.பி ரவீந்திரன் விளக்கமளித்தார். புதிதாக காடுகளை அனைவரும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறிய அவர், மரக்கன்றுகள் நடுவது பற்றி செயல் விளக்கத்தை செய்து காண்பித்தார். 40 மாணவர்கள் 2011ம் ஆண்டு வன நாளன்று அளிக்கப்பட்ட மரக்கன்றுகளை இப்போதும் பராமரித்து, பரிசுகளை வென்றுள்ளனர். சிறந்த 5 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விழாவின் நிறைவாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வளர்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char