அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
  கள பயணம்-2013

பல்வேறு வகையான கற்றல் திறன் மாணவர்களிடையே அறிவை வளர்க்கும். காவியன் பள்ளி. களப் பயணங்கள் மூலம் ஆழமான கல்வியை வழங்குகிறது. இதுபோன்ற பயணங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளைப் பற்றி தகவல்களை அறிந்து மாணவர்கள் பயன்பெற வழிவகுக்கும்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் அமைந்துள்ள பிஸ்கட் தொழிற்சாலைக்கு 1-ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான 145 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பிஸ்கட் தயாரிக்கும் மிகப்பெரிய மெஷின்களைப் பற்றியும், அதபற்றிய அதிகாரிகளின் விளக்கங்களையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். அந்த தொழிற்சாலையின் வரலாறு பற்றிய வீடியோ படத்தையும் பார்த்தனர்.

அக்டோபர் மாதம் 23ம் தேதிய 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான 108 மாணவர்கள் திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் சென்று வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட்டனர். மிகப்பெரிய தூண்கள், அரசவை, முதுமக்கள் தாழி, நூறாண்டுகள் பழமைவாய்ந்த பாத்திரங்கள் போன்றவற்றைப் பார்த்து மாணவர்கள் வியப்படைந்தனர். காந்தி அருங்காட்சியகத்திற்குச் சென்றதன் மூலம் மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள முடிந்தது, ராஜாஜி பூங்காவில் மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளை அனுபவித்து ரசித்தனர்.

செய்திகள்
Project-Management-Char