அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
  கள பயணம்-2011

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணைக்கு பயணம் 2010-2011

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை பயணத்தின்போதும், மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டதால், காவியன் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். வகுப்பறையின் சுவர்களுக்கு அப்பாற்பட்டு குழந்தைகளுக்கு வித்தியாசமான கற்றல் அனுபவம் இருத்தல் வேண்டும் என்பதே கள பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

காலை 9,30 மணிக்குப் புறப்பட்ட மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் மஞ்சளாறு அணையை அடைந்தனர். வழிநெடுகிலும், சுற்றுவட்டாரப் பகுதியின் அழகை அவர்கள் ரசித்துக் கொண்டே பாடிக் கொண்டே வந்தனர். மரங்கள், பசுமையான வயல்கள், மாடுகள், குடிசைகள் போன்றவற்றை ரசித்தபடி சென்றனர். சில மாணவர்கள் அவற்றை புகைப்படமாக எடுத்துக்கொண்டனர். குழந்தைகள் மஞ்சளாறு அணையை அடைந்ததும், அணையிலிருந்து வேகமாக ஓடி வரும் தண்ணீர், இதமான காலநிலையை கரையிலிருந்தவாறே ரசித்தனர். நண்பகலில் குழந்தைகளும், அவர்களும் சென்றிருந்த ஆசிரியர்களும், அப்பகுதியில் மதிய உணவு சாப்பிட்டனர். அங்கிருந்த பனைமரங்களில் நவீன டார்ஜான்கள் போன்று குழந்தைகள் ஓடியாடி விளையாடினர்.

மாணவர்களின் அடுத்து மீன் பண்ணையைப் பார்வையிட்டனர். வலைகள் மூலம் மனிதர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து குழந்தைகள் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். நிறைவாக மாணவர்கள் தங்களின் உடைமைகளை எடுத்துக கொண்டு, பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு பாதுகாப்பாக பிற்பகல் 3,30 மணிக்கு வந்து சேர்ந்தனர். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

செய்திகள்
Project-Management-Char