அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
  காவியன் பள்ளியில் புத்தகக் கண்காட்சி

புத்தகங்கள் நம் சிறந்த நண்பர்கள். காவியன் பள்ளியானது, தீவிர புத்தக வாசிப்பாளர்களை மிக இளம் வயதிலேயே உருவாக்க பாடுபட்டு வருகிறது. இளம் புத்தகவாசிப்பாளர்களை உருவாக்கும் ஒரு முயற்சியாக, 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கும், வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நுணுக்கங்கள்

மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிக புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். வினாடி வினா, பொது அறிவு, நாவல்கள், சிறுகதைகள், அறிவியல் ஆய்வுகள், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான புத்தகங்களும், சி.டிக்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் விரும்பும் புத்தகங்களைத் தேர்வு செய்தனர். குறிப்பிட்ட தினத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் புத்தகங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

செய்திகள்
Project-Management-Char