அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆண்டு விழா 2012

காவியன் பள்ளியின் 3-வது ஆண்டுவிழா 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 180 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில், ஆசிரியர் ஒருவர் வரவேற்றார். தொடர்ந்து ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், முழு வருகைப்பதிவு, வாசித்தல், சிறந்த பல் பராமரிப்பிற்காகவும் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. நவீன பரதநாட்டிய நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள் தொடங்கி, பல்வேறு நடனங்கள், பாடல்கள், கீபோர்டு மற்றும் நாடகத்துடன் நிறைவடைந்தன. அனைத்து கலை நிகழ்ச்சிகளும் கூடியிருந்த அனைத்து பார்வையாளர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வகையில் தொடர்ந்து கரவொலி எழுப்பப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் மிகுந்து வரவேற்பு அளித்தனர். நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char