அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 தீபாவளி கொண்டாட்டம் 2012

தீபாவளி எனறாலே பட்டாசுகள், ராக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள், பலகாரங்கள் நம் நாவில் சுவை கொட்டச் செய்யும். இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகை கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள முக்கியத்துவ பாரம்பரியத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், காவியன் பள்ளி கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகிறத. 2012ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்கிய கொண்டாட்டங்களில், இறைவணக்கப்பாடலுடன் தீபாவளியின் புராண விளக்கமும் அளிக்கப்பட்டது. நரகாசுரனை வதம் செய்ததே தீபாவளி கொண்டாடப்படுவதன் நோக்கம என்று தெரிவிக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை விளைவதைக் குறிப்பதே தீபாவளியாகும்


கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக வண்ணமிகு நடனங்கள் இடம்பெற்றன. பட்டாசு வெடித்தல், இனிப்பு சாப்பிடுதல் மட்டுமே தீபாவளி அல்ல, மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், சகோதரத்துவத்தை வளர்த்தலும் அடங்கும் என்று குழந்தைகள் உணர்த்தியது குறிப்பிடத்தக்கது. தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து செல்வி. ஈஸ்வரி பேசினார். பட்டாசுகளை வெடிக்கும்போது, பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது. மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தீபாவளிக் கொண்டாட்டம் நிறைவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char