அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2017

காவியன் பள்ளியின் 9 வது ஆண்டு விளையாட்டு தினம், 19 ஆகஸ்டு 2017 சனிக்கிழமை அன்று விமர்சயாக நடைபெற்றது. 10 ஆம் வகுப்பை சேர்ந்த தாமோதரன் MOCயை வழங்க, எட்டாம் வகுப்பை சேர்ந்த ஹரிணி தமிழ் தாய் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது. 10 ஆம் வகுப்பை சேர்ந்த சுரக்ஷா வர்வேற்புரை வழங்க, தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி, பள்ளிக் கொடி ஆகியவை முறையே மேலாண்மை பிரதிநிதி, பள்ளி முதல்வர், பள்ளி துணை முதல்வர் ஆகியோரால் ஏற்றப்ப்ட்டது. ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருமையையும் ஒற்றுமையையும் குறிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். மண்டல நிலை வெற்றியாளர்களான ஆறாம் வகுப்பை சேர்ந்த தருண்ராஜ், ஏழாம் வகுப்பை சேர்ந்த எவஞ்சல் அலின், ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த டார்வின், எட்டாம் வகுப்பை சேர்ந்த யோகேஷ்வரன் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர். ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த ஜோன் செபஸ்டியன் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து நடந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் - ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை 4X100 தொடர் ஓட்டம், வண்ணப்பந்துகளை சேகரிக்கும் போட்டியில் LKG மாணவர்கள், கிரீடம் வைத்து நடக்கும் போட்டியில் UKG மாணவர்கள், வளையங்கள் வைத்து பந்துகளை சுற்றும் போட்டியில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்ட கங்காரு ஓட்டம் நடைப்பெற்றன. இதைத் தொடர்ந்து மாஸ் ட்ரில், பிம் பாம், யோகா, சிலம்பம் ஆகியவை மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் சிறப்புரை ஆற்றினார். எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி நன்றியுரை ஆற்றினார். எட்டாம் வகுப்பு மாணவி அனுஷ்ரி தேசிய கீதம் பாட விழா இனிதே முடிந்தது.

செய்திகள்
Project-Management-Char