அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2018

நமது காவியன் பள்ளியில் 72-வது சுந்ததிர தின விழா மற்றும் பள்ளியின் 10-வது விளையாட்டு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இளந்தென்றல் வீச, இனிய காலை வேளை 8:30 மணியளவில், அன்றைய நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது, வரவேற்புரையைத் தொடர்ந்து, தேசியக்கொடி, ஒலிம்பிக்கொடி, பள்ளி கொடி, முறையே செயலர், தலைமையாசிரியை மற்றும் உதவி தலைமையாசிரியையரால் ஏற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த அணிவகுப்பினைத் தொடர்ந்து, ஒலிம்பிக் விளக்கினை நமது பள்ளியைச் சார்ந்த மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வான மாணவ, மாணவிகளால், ஏந்தி செல்லப்பட்டு பள்ளியின் செயலர் அவர்களால் ஏற்றப்பட்டு இனிதே விழா ஆரம்பமானது.

ஓட்டப்பந்தயம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகள் வரவேற்பு நடனத்துடன் (பரதம்) தொடங்கப்பட்டு, கைகளால் பயிற்சி, மழலைகளின் குடை நடனம், வண்ணமலர் மாலை நடனம், தற்காப்பு கலையான கராத்தே, யோகா, தமிழ் மற்றும் ஆங்கில சிறப்புரை தொடர்ந்து, மதம், இனம், மொழி, வேறுபட்டாலும், அனைவரும் இந்தியர் என்பதை உணர்த்த பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து மனதை கொள்ளைகொண்டனர், நமது மழலை செல்வங்கள். இதனை தொடர்ந்து ஒயிலாட்டம் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெற்றோர்களால் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நன்றியுரை வழங்கி விழா இனிதே நிறைவு பெற்றது.

செய்திகள்
Project-Management-Char
< /body> < / html >