அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2012

66-வது சுதந்திர தினம் & 4-வது ஆண்டு ஸ்போர்ட்ஸ் டே கொண்டாட்டம்

“வலுவான உடல்திறனே மிகச்சிறந்த அறிவு” என்பதே காவியன் பள்ளியின் தாரக மந்திரம். காவியன் பள்ளியில் அளிக்கப்படும் விளையாட்டுப் பயிற்சி, குழு பணியையும், விளையாட்டுத் திறமையையும் வெளிப்படுத்தும். விளையாட்டில் குழந்தைகளின் திறமையை உறுதிப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் கொண்டாடி வருகிறோம். இந்த தினத்தில், நேர்மையான விளையாட்டு, அணி மனப்பான்மை வலியுறுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 4-வது ஆண்டு ஸ்போர்ட்ஸ் டே, 66-வது சுதந்திர தினத்தில் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை தலைமை ஆசிரியை ஏற்றி, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். காவியன் பள்ளிக் குழந்தைகளின் தேச பக்திப் பாடலுடன் தொடங்கிய விழாவில், மாணவர்களின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் இடம்பெற்ற நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விளையாட்டுப் போட்டிகளைக் குறிக்கும் வகையில், மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே மாதிரியான தொப்பி அணிந்தும், தேசியக் கொடியின் வண்ணத்திலான தொப்பிகளை அணிந்தும் நடைபெற்ற உடற்பயிற்சி அனைவரின் மனங்கவரும் வகையில் அமைந்த்து.

மாணவ-மாணவிகளின் தடகளப் போட்டிகள் மற்றும் அவற்றில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கான போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை விடவும், மைதானத்தில் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் முக்கியமானவர்களே என்ற கருத்தை தலைமை ஆசிரியை மாணவர்களிடம் வலியுறுத்தினார். .வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char