அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 12-12-12 தின கொண்டாட்டம்

12-12-12 இந்த நூற்றாண்டின் ஒரே மாதிரியான 3 எண்களைக் கொண்ட தினத்தைக் குறிப்பதால், இது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்றதொரு நாள் வந்திருப்பது சிறப்பு. இதன் பின்னர் ஜனவரி மாதம் 2,101ம் ஆண்டில் முதல் தேதிதான் வரும். 6ம் வகுப்பு மாணவர்கள் 12-12-12 தினத்தை மற்ற மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினார்கள். 12-12-12 என்ற எண்ணுடன் கூடிய head band அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் இந்த நாளைக் கொண்டாடினார்கள். காலையில் பள்ளி பிரார்த்தனையின் போது, இந்த நாளின் சிறப்புகள் குறித்தும், அதன் உண்மைகள் குறித்தும் சுவையான தகவல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.


  • 12 எண்ணின் வகுபடும் தன்மையைப் பொறுத்து கணிதவியலாளர்கள் அதனை விரும்புவர். 1,3,4,6 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடக்கூடியது,
  • எளிதில் வகுபடும் எண் 12 என்பதால், பொதுவாக அளவகளுக்கு இதனை பயன்படுத்துவர். ஒரு அடி 12 அங்குலம், 12 அவுன்ஸ் ஒரு டிராய் பவுண்ட், 12 என்பது ஒரு டஜன்,
  • மதத்திலும் 12 பயன்படுத்தப்படுகிறது. 12 அப்போஸ்தல், 12 மாய கடவுள், ராசிபலன் 12 போன்றவை உதாரணம்
  • ஒரு சுற்றின் முடிவாக 12 இருக்கும். மற்றொன்று தொடக்கமாக அமையும். டிசம்பர் 12வது மாதம். ஒரு நாளில் 12 மணி நேரம் இரவும், 12 மணி நேரம் பகலும் ஆகும்.
  • 12 ஜோடி எலும்புகள் மனித இடுப்பில் உள்ளன. 12 பேர் நிலவுக்குச் சென்றனர்

செய்திகள்
Project-Management-Char