அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 அறிவியல் கண்காட்சி - 2020

அறிவியல் மனித இனத்துக்கான அழகான பரிசு. அதை சிறப்பாக்க நமது காவியன் பள்ளியில் 2019-2020-ம் கல்வியாண்டில் 11-01-2020 அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நம் பள்ளி முதல்வர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நமது பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. “பெருமைக்காக தேடிப்பெறுவது அல்ல கல்வி. பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்வது கல்வியின் நோக்கம்”.

அறிவுத் தாகத்தை தூண்டும் விதம் வகுப்பு வாரியாக, மிருகக்காட்சி, வனப்பகுதி, வீட்டுப்பண்ணை, காற்றாலை, காய்கறிகளை வைத்து உருவாக்கிய பொம்மை, செயற்கைக்கோள், தொங்கும்தோட்டம், மரங்களைப் பாதுகாப்போம், நிலவும் சந்திராயனும், நீராதாரம் போன்ற கருத்துகளை விளக்கும் மாதிரிகள் முறையே அமைக்கப்பட்டிருந்தன.

மாணவ,மாணவிகள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும் விதம் செயற்கை நீரூற்று, மழைநீர் சேகரிப்பு, மண்தோண்டும் இயந்திரம், சொட்டுநீர் பாசனத்திட்டம், பனிக்கூழ் வழங்கும் இயந்திரம், கம்பிவட வாகனம், படகு, படகு இல்லம், இதயம், நுரையீரல் மாதிரி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இச்சமயம் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வும், புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நம் மாணவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் சிறப்பான செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டிய நிகழ்வு அறிவியல் கண்காட்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

செய்திகள்
Project-Management-Char