அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2019

நமது பள்ளியின் விளையாட்டு விழா ஆகத்து 15ஆம் நாள் வியாழக்கிழமை காலை 08:30 மணியளவில் துவங்கியது. விழாவில், தமிழ்தாய் வாழ்த்து முழக்கத்துடன் துவங்கப்பட்டது. வழக்கமான வரவேற்;புரை எம் ஒன்பதாம் வகுப்பு மாணவி இவாஞ்சல் ஆலின் வாசித்தளித்தார். பின்பு அனைவரும் எழுந்து நின்று ஒருங்கிணைந்து கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

கொடியேற்றதில் தேசியக்கொடியினை பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களும், பள்ளிக் கொடியை ஒருங்கிணைப்பாளர் அவர்களும், விளையாட்டுக் கொடியை (ஒலிம்பிக்) கொடியை பள்ளி நிர்வாக அலுவலர் அவர்களும் தம் திருக்கரங்களால் ஏற்றி சிறப்பித்தனர்.

கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின் மாணவர்களின் ஒலிம்பிக் தீபம் எற்றி, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நம் பள்ளியின் சார்பாக வெற்றிப் பதக்கங்களும், கோப்பைகளும், சான்றுகளும் வழங்கப்பட்டன.

பின் மாணவமணிகளின் கலை நிகழ்ச்சிகளாக பரதம், அரும்புகளின் குறும்பு நடனம், லெசிம், யோகா போன்றவை இனிதாய் நடைபெற்றன. விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பால் நாட்டுப்பண்ணுடன் இனிதே விழா நிறைவு பெற்றது.

செய்திகள்
Project-Management-Char
< /body> < / html>