அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 சுதந்திர தினம்-2011

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய பெரிய மனிதர்களை நாம் வணங்குவோம். 65-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். எந்தவொரு நாட்டின் சுதந்திர தினம் என்பது பெருமை மற்றும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். இந்த சிறப்புமிகுந்த விழாவில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தாய்நாட்டை விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளக்கு உயரிய மரியாதை செலுத்தப்படும். காவியன் பள்ளியில் இந்த தேசிய விழா மிகப்பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெற்றது. கொடியேற்றுதலுடன் தொடங்கிய விழாவில் இளம் மனங்களில் தேச பக்தியை ஏற்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. தலைமை ஆசிரியையின் சுதந்திர தின செய்தியுடன், குழந்தைகளின் கடமைகள், பொறுப்புகளை உணர்த்தும் வகையிலான குறும்படம் காண்பிக்கப்பட்டது. தேசத் தலைவர்கள் போன்று வேடமணிந்த மாறுவேடப்போட்டி, தேசபக்திப் பாடல்கள், நடனம் போன்றவையும் நடத்தப்பட்டன.


கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, ஒரு வாரம் முன்பு, வண்ணம் தீட்டுதல், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்திகள்
Project-Management-Char